ராகுல் காந்தி தான் மீண்டும் காங்கிரஸ் தலைவர் -டெல்லி கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

A meeting of the Delhi Congress has decided that Rahul Gandhi should be reinstated as the leader of the Congress party.

புதுடெல்லி:காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று டெல்லி காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று டெல்லி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நடத்திய கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக ராகுல் காந்தி மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் கூறுகையில் “ராகுல் காந்தியால் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை ஊக்குவிக்க முடியும். விவசாயிகள் பிரச்சனை முதல் ஜிஎஸ்டி பாதிப்புகளை அவர் கையாண்ட விதம் அவரின் தலைமைத்துவ திறனைக் காட்டுகிறது” என்று கூறினார்.

மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் குடியரசு தினத்தன்று டெல்லி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறையை தடுக்க தவறியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரும் பொறுபேற்று பதவிலக வேண்டும் என்று மற்றறொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியுற்று பெரிய பின்னடைவை சந்தித்தது ,இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்தார்.அதன் பின்பு சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.