ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி...!

Rahul Gandhi pays tribute to Jawaharlal Nehru on the occasion of his 57th death anniversary.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 57-வது நினைவுதினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி அவர்கள் அஞ்சலி.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1964-ஆம் ஆண்டு மே-27 ஆம் தேதி காலமானார். இவரது 57வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, நேருவின் நினைவு தினத்தையொட்டி சாந்திவன் பகுதியிலுள்ள  ஜவஹர்லால் நேரு நினைவிடத்தில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தி உள்ளார்.

மேலும், அவரது 57-வது நினைவு தினத்தில் அவர் கூறிய ‘தீமை சரிபார்க்கப்படாதது தீய சகிப்புத்தன்மை வாய்ந்த விஷங்களால் முழு அமைப்பையும் வளர்க்கிறது’ என்ற பொன்மொழி ஒன்றினை நினைவுகூர்ந்து ட்வீட் செய்துள்ளார்.

unknown node