காங்கிரஸ் கட்சியை வழிநடத்த ராகுல்காந்தியை போன்று ஒரு இளைஞர் தேச தலைவராக மீண்டும் வர வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பெரும் தோல்விக்கு பொறுப்பேற்று தன் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை ராகுல்காந்தி தெரிவித்திருந்தார். அவரது ராஜினாமாவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், திடீரென ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் அலுவல் காரிய கமிட்டிற்கு அனுப்பினார். இந்நிலையில், கடந்த வியாழன் அன்று நாடாளுமன்றத்தில் கூறுகையில், தான் ஏற்கனவே ராஜினாமா கடிதத்தை குடுத்து விட்டதால் மீண்டும் தலைவராக பொறுப்பேற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.எனவே, காங்கிரஸ் மேலிடம் கட்சியை வழிநடத்த புதிய தலைவரை எந்தவித தாமதமும் இல்லாமல் தேர்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தன் டுவிட்டர் பதிவில், காங்கிரஸ் கட்சியை வழிநடத்த மீண்டும் ராகுலை போல ஒரு இளைஞர் தலைவர் பதவிக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். எனவே காங்கிரஸ் மேலிடம் இளைஞர்களை ஈர்க்க இளைய தலைமுறை தலைவர்களை தேர்வு செய்ய வேண்டு என்றும் கேட்டுள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…