மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்சல்வாடி குக்கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலச்சரிவில் 86 கிராமவாசிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
வியாழக்கிழமை மாலை வரை இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக இருந்தது. மேலும் ஆறு உடல்கள் மீட்கப்பட்டதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்தது.
கனமழை காரணமாக வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இடைநிறுத்தப்பட்ட தேடல் மற்றும் மீட்பு பணியை, நான்கு என்டிஆர்எப் குழுக்கள் இணைந்து மூன்றாவது நாளாக மேற்கொண்டு கொண்டு வருகின்றனர்.
