குஜராத்தில் உள்ள வதோதராவில் ரயில் மீது ஓடிய முதலை மீட்பதற்காக 25 நிமிடங்கள் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
செவ்வாய் கிழமை காலை எட்டு மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்று வதோதரா-மும்பை பாதையில் ரயில் மீது ஓடியதால் அடிபட்டு கிடந்துள்ளது. முதலை வலியால் துடித்ததால் விலங்குகளை மீட்பவர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்காக சுமார் 25 நிமிடங்கள் சூப்பர்ஃபாஸ்ட் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மற்ற ரயில்களும் முதலை பாதையை விட்டு செல்லும் வரை கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் காத்திருந்துள்ளது. பல்வேறு முயற்சி செய்து முதலையை மீட்க முயன்ற போதிலும், முதலை தலையில் அடிபட்டதால், அது இறந்துவிட்டது. வனவிலங்கு ஆர்வலர் ஹேமந்த் வத்வானா தெரிவித்துள்ளதாவது, அதிகாலை 3:15 மணியளவில் கர்ஜன் ரயில் நிலையத்தின் நிலைய கண்காணிப்பாளரிடம் இருந்து ஒரு முதலை கிடப்பதாக எனக்கு தகவல் வந்தது.
ஆனால், அந்த இடம் நடுவில் அமைந்திருப்பதால் விரைவாக அங்கு செல்வது கடினமான விஷயம் என்று கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், எங்களது வாகனம் கர்ஜன் ரயில் நிலையத்தை அடைந்த பிறகு, ரயில்வே அதிகாரிகள் ராஜ்தானி எக்ஸ்பிரஸை சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தியது எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அந்த இறந்த முதலை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…