ராஜ்நாத் சிங் ரஷியாவிற்கு இன்று பயணம்.!

ர‌ஷிய தலைநகர் மாஸ்கோவில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக  பாதுகாப்புத் துறை

ர‌ஷிய தலைநகர் மாஸ்கோவில் ‌ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக  பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் கலந்துகொள்ள ராஜ்நாத் சிங் இன்று முதல் 3 நாள் பயணமாக ர‌ஷியா செல்கிறார்.

இந்த மாநாட்டில் சீன பாதுகாப்புத் துறைஅமைச்சர் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வருகின்ற 10-ம் தேதி நடைபெறவுள்ள ‌ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டிற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ர‌ஷியா அழைப்பு விடுத்துள்ளது.

ரஷியாவில் கடந்த ஜூன் 24-ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் உலகப் பேரில் ரஷியா வெற்றி பெற்று  75-வது ஆண்டுகள் நிறைவு பெற்ற விழாவில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.