ரஷ்யா பயணம் மேற்கொள்ளும் ராஜ்நாத் சிங்.!

2-ம் உலகப்போரில் ஜெர்மனியை, ர‌ஷியா வென்றது. இதன் 75-வது நினைவு தினத்தை ர‌ஷியா கொண்டாடவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், ராணுவ அணிவகுப்பு மே மாதம் நடத்த திட்டமிட்டு

2-ம் உலகப்போரில் ஜெர்மனியை, ர‌ஷியா வென்றது. இதன் 75-வது நினைவு தினத்தை ர‌ஷியா கொண்டாடவுள்ளது. இந்த நிகழ்ச்சியில், ராணுவ அணிவகுப்பு மே மாதம் நடத்த திட்டமிட்டு இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த அணிவகுப்பு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ர‌ஷிய தலைநகர் மாஸ்கோவில் வருகின்ற 24-ம் தேதி நடைபெறவுள்ள அணிவகுப்பை பார்வையிடு ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக நாளை ர‌ஷியா செல்கின்றார். சீனாவுடனான மோதலுக்கு மத்தியில் ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த அணிவகுப்பில் பங்கேற்க இந்தியாவின் முப்படைகளில் இருந்து 75 வீரர்களை கொண்ட குழு ஒன்று ஏற்கனவே ர‌ஷியா சென்று உள்ளது. மேலும்,  இந்த அணிவகுப்பில், சீனா உட்பட 11 நாடுகளின் படைகள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.