ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் எம்.பி மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல்.!

ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட எம்.பி மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
வருகின்ற 14-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் தொடங்க உள்ள நிலையில், முதல் நாளன்று ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. தேசிய ஜநாயக கூட்டணி வேட்பாளராக ஏற்கனவே துணை தலைவர் பதவியில் இருந்து வந்த, ஹரிவன்ஷ் நாராயண் சிங்கே மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை வெற்றி பெற வைக்க பாஜக மூத்த அமைச்சர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதற்காக, கூட்டணியில் இல்லாத தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் அதேவேளையில், தேர்தல் நாளன்று, அனைத்து பாஜக எம்.பி.க்களும் கட்டாயம் சபையில் ஆஜராக வேண்டுமென கொறடா உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்.பி மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சிகள் தரப்பில், பொது வேட்பாளரை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025