புதிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதிவேற்றதை தொடர்ந்து, ராம்நாத் கோவிந்த், அரசு மாளிகையில் இருந்து தனது வீட்டிற்கு திரும்பினார்.
இந்தியாவின் புதிய 15வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டு, இன்று அவர் முறைப்படி குடியரசு தலைவர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து அவர் இனி குடியரசு தலைவர் மாளிகையில் அதிகாரபூர்வமாக தங்கவைக்கப்படுவார். அதே போல, முந்தைய குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், தனது, உடமைகளுடன் மாளிகையை காலி செய்துவிட்டார்.
ராம் நாத் கோவிந்த் தனது மனைவியுடன், டெல்லியில் உள்ள ஜன்பத் சாலையில் இருக்கும் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.