ராமேஸ்வரம் கஃபேவில் வெடிகுண்டு வெடித்த சிசிடிவி வெளியானது..!
Rameshwaram Cafe: பெங்களூரில் இன்று மதியம் பிரபல பிரபலமான ராமேஸ்வரம் கஃபேவில் மர்ம பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர் என மொத்தம் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
READ MORE- ராமேஸ்வரம் கஃபேயில் வெடித்த மர்ம பொருள்.. விசாரணைக்கு வந்த என்.ஐ.ஏ..!
இந்த சம்பவத்தை தொடர்ந்து ராமேஸ்வரம் கஃபேவில் தற்போது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குழு, தடவியல் குழு மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா “பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்தது வெடிகுண்டு தான் எனவும் அது IED குண்டு வெடிப்பு போல் தெரிகிறது.
READ MORE- ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்தது வெடிகுண்டு தான்..முதல்வர் சித்தராமையா..!
காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. முழுமையான அறிக்கை வந்த பிறகுதான் இந்த சம்பவம் குறித்து தெளிவாக கூற முடியும் என தெரிவித்தார். இந்நிலையில், ராமேஸ்வரம் கஃபேவில் பிற்பகல் நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் ஹோட்டல் வைக்கப்பட்டிருந்த கேமரா 9 -ல் தெளிவாக பதிவாகி உள்ளது.
CCTV footage of Bangalore #RameshwaramCafe blast.
Looks like much more serious than what was being told. pic.twitter.com/pARMOJJLK5
— Sanjeevee sadagopan (@sanjusadagopan) March 1, 2024