நான் தான் இலங்கைக்கு பிரதமர்..........என்னை நீக்க அதிகாரம் இல்லை..........ரணில் தடாலடி...!! யார் பிரதமர் குழப்பும் இலங்கை.....முற்றியது அரசியல் போர்...!!!

இலங்கை பிரதமராக ரணில் விக்ரம் சிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகளும்  கூட்டணி அமைத்தே

இலங்கைக்கு நான் தான் பிரதமர்  தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் ரணில் விக்கரம சிங்கே தடாலடியாக தெரிவித்துள்ளார்.இலங்கையில் 2015 வருடம் அதிபராக மைத்திரி பால சிறிசேனா பதவியேற்றார். பிரதமராக ரணில் விக்கிரம சிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகளும் கூட்டணி அமைத்தது.

unknown node

இந்த கூட்டணி  3 வருட ஆட்சியை இலங்கையில்  நடத்தி வந்தது.இந்த நிலையில் இன்று திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக முன்னாள் அதிபராக இருந்த மஹிந்த ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இந்த பதவியேற்பு விழா இலங்கை அதிபர் அலுவலகத்தில் நடந்த விழாவில் மகிந்த ராஜ்பக்சேவுக்கு அதிபராக உள்ள சிறிசேனா முன்னிலையில் இலங்கையின் பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றுக்கொண்டார்.

unknown node

இலங்கை பிரதமராக ரணில் விக்ரம் சிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் இலங்கை சுதந்திர கட்சிகளும்  கூட்டணி அமைத்தே இலங்கையில் ஆட்சி நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.இந்தக் கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக சுதந்திர கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக்கப்பட்டுள்ளார்.

unknown node

இந்த நிலையில் இலங்கை பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதை அடுத்து தனது கட்சி அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் ரணில் விக்கிரமசிங்கே அவசர ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.ரணில் இந்த பதவி பறிப்பு குறித்து தெரிவிக்கையில் இலங்கைக்கு நான் தான் பிரதமர்  தொடர்ந்து பிரதமராக நீடிப்பேன் அரசியலமைப்பு சட்டத்தின்படி பிரதமர் பதவியிலிருந்து  என்னை நீக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளார் இதனால் அரசியல் சிக்கலில் இலங்கை மாறியுள்ளது.தற்போது இலங்கையின் பிரதமர் யார் என்று மக்களே குழம்பிய நிலையில் உள்ளனர்.இதனால் அங்கு அரசியல் போர் ஆரம்பமாகியுள்ளது.

DINASUVADU