பா.ஜ.க.வுக்காக பிரச்சாரம் செய்யத் தயார் : முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்கப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்காக பிரச்சாரம் செய்யத் தயார் என முதலமைச்சர்

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்கப்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்காக பிரச்சாரம் செய்யத் தயார் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

தனிமாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் டெல்லி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், 2019ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாக டெல்லிக்கு தனிமாநில அந்தஸ்து வழங்கப்பட்டால், மாநிலத்தின் அனைத்து வாக்குகளும் பா.ஜ.க.வுக்கே கிடைக்கும் என்று அவர், தமது கட்சியும் கூட  பா.ஜ.க.வுக்காக பிரச்சாரம் செய்யும் என்றார்.

தனி மாநில அந்தஸ்து வழங்காவிட்டால்  பா.ஜ.க.வின் செல்வாக்கு டெல்லியில் எடுபடாது என்றும் அவர் தெரிவித்தார்.