நாகாலாந்தில் பெட்ரோல், டீசல் வரிகள் குறைப்பு..!

Petrol and diesel prices have been reduced in Nagaland.

சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அடிப்படையில் இந்தியாவில் தினமும் பெட்ரோல், டீசல் விலை மாறிவருகிறது. இந்நிலையில், நாகலாந்து மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி வாகன எரிபொருட்கள் மீதான வரி லிட்டருக்கு 29.80%-லிருந்து 25%-ஆகவும், பெட்ரோல் விலை ரூ.18.26-லிருந்து ரூ.16.04-வரை குறைக்கப்பட்டுள்ளது.

டீசல் மீதான வரி 17.50%-லிருந்து 16.50%-ஆக குறைவதால் டீசல் விலை ரூ.11.08-லிருந்து ரூ.10.51 வரை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை மத்திய அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறிவருகின்றனர்.