ஜோஷிமத்தில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மாதம் ரூ.4,000 நிவாரணம்- உத்தரகாண்ட் அரசு.!

ஜோஷிமத்தில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு, வீட்டு வாடகைக்கென மாதம் ரூ.4,000, ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோஷிமத்தில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு, வீட்டு வாடகைக்கென மாதம் ரூ.4,000, ஆறு மாதங்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத்தில், நிலம் சரிந்து வீடுகள் இடிந்ததில் அங்கிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு, வீட்டு வாடகையாக ஆறு மாதத்திற்கு மாதம் ரூ.4,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முதலமைச்சர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அப்புகுதியினை ஆய்வு செய்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி, விரிசல் ஏற்பட்டுள்ள வீடுகளையும் பார்வையிட்ட பிறகு நடத்திய உயர்மட்ட குழுவின் கூட்டத்தில், இது குறித்த நிவாரண முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node