அதிகரித்து வரும் கொரோனா-9 மாத குழந்தை உயிரிழப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 18,930 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 18,815 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 18,930 ஆக பதிவாகிய நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 18,815 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,19,457-லிருந்து 1,22,335ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்,மும்பையில் நேற்று(ஜூலை 7)  இரண்டு COVID-19 இறப்புகள் பதிவாகியுள்ளன.

அதில் பிறந்து 9 மாதமே ஆனா பச்சிளம் குழந்தை கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது. இது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து மும்பையில் 0-9 வயதுக்குட்பட்ட 28 குழந்தைகள் இறந்த நிலையில், மிக குறைந்த வயதில்(9 மாதம்) கொரோன தொற்றால் உயிரிழந்த முதல் குழந்தை இதுவே.