முன்னாள் இந்திய கேப்டன் வீட்டில் கொள்ளை..! பதக்கம் திருடு போனதால் பதற்றம்..!

ஒடிசாவில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பிரபோத் டிர்கியின் வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசாவில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் பிரபோத் டிர்கியின் வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசாவில் உள்ள புவனேஸ்வரில் முன்னாள் சர்வதேச ஹாக்கி வீரரும், இந்திய அணியின் கேப்டனுமான பிரபோத் டிர்கி அரசு குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த கொள்ளையில் தங்க நகைகள் உட்பட ஐந்து பதக்கங்கள் திருடப்பட்டுள்ளது. பதக்கங்கள் திருடு போனதையடுத்து சம்பவம் குறித்து பிரபோத் டிர்கி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இவரளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.

2007 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஆசியக் கோப்பையில் டிர்கேயின் தலைமையில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.