காருக்கு அடியில் இழுத்து செல்லப்பட்ட டெல்லி பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவிப்பு.
டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று காலை கார் மோதி உயிரிழந்த 20 வயது பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அந்த பெண்ணுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வோம் என்றும் கூறினார்.
கார் மோதி உயிரிழந்த 20 வயது பெண்ணின் உடல் பல கிலோமீட்டர் தூரம் காருக்கு அடியில் இழுத்து செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், காரில் இருந்த 5 பேரும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.