RSS சித்தாந்தமும், நேதாஜி சித்தாந்தமும் எதிரெதிர் துருவங்கள் – நேதாஜியின் மகள்

எனது தந்தை மதச்சார்பின்மையை பின்பற்றிய ஒரு இடதுசாரி ஆக தான் இருந்தார்  என நேதாஜியின் மகள் பேச்சு.

எனது தந்தை மதச்சார்பின்மையை பின்பற்றிய ஒரு இடதுசாரி ஆக தான் இருந்தார்  என நேதாஜியின் மகள் பேச்சு.

இன்று நேதாஜியின் பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகள் அனிதா போஸ் தனது தந்தை குறித்து பேசி உள்ளார்.

அவர் கூறுகையில், ஆர்எஸ்எஸ் பாஜகவினர் எனது தந்தையின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். ஆனால் அவரது கொள்கைகளை யாரும் ஏற்கவில்லை. எனது தந்தை மதச்சார்பின்மையை பின்பற்றிய ஒரு இடதுசாரி ஆக தான் இருந்தார்.

அவரது கொள்கையும் பாஜக ஆர்எஸ்எஸ் இன் கொள்கையும் எதிரெதிர் துருவங்கள் போன்றவை. எனது தந்தையை சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு பல முன்னெடுப்புகளை செய்கின்றது. ஆனால் அவர் உயிரோடு இருந்து இருந்தால் இந்த அரசை எதிர்த்து இருந்தால் பாஜக அவரை கௌரவிக்காது என தெரிவித்துள்ளார்.