சோகம்; தென்னாப்பிரிக்காவில் இருந்து வந்த மற்றொரு சிறுத்தை இறப்பு.!

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட மற்றொரு சிறுத்தை, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் இறந்தது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட மற்றொரு சிறுத்தை, மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில் இறந்தது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட மற்றொரு சிறுத்தையான உதய், குனோ தேசிய பூங்காவில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையின் போது இறந்துவிட்டது, மேலும் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, என்று மத்தியப் பிரதேச தலைமை வனப் பாதுகாவலர் ஜே.எஸ்.சௌஹான்தெரிவித்தார்.

இந்தியாவில் மீண்டும் ஆப்பிரிக்க சிறுத்தைகளை அறிமுகப்படுத்தும் திட்டமாக, தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த பிப்ரவரி 18 அன்று, 11 சிறுத்தைகளுடன் இந்த உதய் எனும் ஆண்சிறுத்தை இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிறுத்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை கவனித்த வனக்குழுவினர், சிறுத்தையை  மருத்துவ மனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாலை 4 மணியளவில் சிறுத்தை இறந்தது.

குனோ தேசிய பூங்காவில் சிறுத்தை இறப்பது, இது இரண்டாவது முறை ஆகும். நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து இருபது சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன. நமீபியாவில் இருந்து கடந்த ஆண்டு குனோ தேசிய பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட எட்டு சிறுத்தைகளில் ஒன்றான சாஷா, கடந்த மார்ச் மாதம் இறந்தது குறிப்பிடத்தக்கது.