சாகர் ராணா கொலை வழக்கில் கைதான,மல்யுத்த வீரர் சுஷில் குமார்,சிறையில் தனக்கு டிவி வேண்டும் என்று கோரி திகார் சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் கடந்த 4-ஆம் தேதி உள்ள சத்ராசல் அரங்கில் இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், முன்னாள் தேசிய சாம்பியனான சாகர் ராணாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.இதில் சாகர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சாகர் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, டெல்லி தனிப்படை போலீசார் சுஷில் குமாரை மே 23 ஆம் தேதியன்று கைது செய்தனர்.பின்னர்,இந்த வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றம் குமாரின் நீதிமன்றக் காவலை ஜூன் 25 வரை நீட்டித்தது.
பின்னர்,டெல்லி காவல்துறையினர் சுஷில் குமாரை மண்டோலி சிறையிலிருந்து திகார் சிறைக்கு அனுப்பினர்.
இந்நிலையில்,சுஷில் குமார் சிறையில் தனக்கு டிவி வேண்டும் என்று கோரி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:”எனக்கு டிவி கிடைத்தால், மல்யுத்தம் குறித்த புதிய செய்திகள் கிடைக்கும் “,என்று தெரிவித்துள்ளார்.
சுஷில் குமார் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக 2 பதக்கங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…