சாகித்ய அகாடமி விருதுகள்: விஷ்ணுபுரம் சரவணனுக்கு சாகித்ய பால புரஸ்கர் விருது அறிவிப்பு.!
விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய `ஒற்றைச்சிறகு ஓவியா' என்கிற சிறார் நாவலுக்கு `சாகித்திய பாலபுரஸ்கார் 2025’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி : சாகித்ய அகாடமி, இந்தியாவின் தேசிய இலக்கிய அகாடமியாக, இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புகளை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
இதில் முக்கியமானவை சாகித்ய அகாடமி விருது, பால சாகித்ய புரஸ்கார் (குழந்தைகள் இலக்கியத்திற்கான விருது), மற்றும் யுவ புரஸ்கார் (இளம் எழுத்தாளர்களுக்கான விருது) ஆகியவை அடங்கும். 2025 ஆம் ஆண்டிற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழ் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு அவரது சிறார் நாவலான ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற படைப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது.
விஷ்ணுபுரம் சரவணன் ஒரு முக்கியமான தமிழ் சிறார் இலக்கிய எழுத்தாளர் ஆவார். அவரது ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நாவல், குழந்தைகளுக்கான இலக்கியத்தில் உணர்வுப்பூர்வமான கதைகளத்தையும், ஆழமான கருப்பொருளையும் கொண்டு பரவலான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்த நாவல் குழந்தைகளின் உலகை உணர்ச்சிகரமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது, இதனால் இது சாகித்ய அகாடமியின் கவனத்தை ஈர்த்து விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.