நாட்டை உலுக்கிய சந்தேஷ்காலி வழக்கு.. கைது செய்யப்பட்ட ஷேக் ஷாஜகான்..!

Sandeshkhali : மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள சந்தேஷ்காலி பகுதியை சார்ந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் இவர் மீது

Sheikh Shahjahan

Sandeshkhali : மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்திலுள்ள சந்தேஷ்காலி பகுதியை சார்ந்தவர் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷேக் ஷாஜகான் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் கடந்த சில நாட்களில் குவிந்தது.  அதிலும்  ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது  பாலியல் வன்கொடுமை வழக்கு மற்றும் நில அபகரிப்பு ஆகியவற்றில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

READ MORE-தீ விபத்து ‘வதந்தி’.! அலறி அடித்து ஓடிய பயணிகள்… ரயில் மோதி 2 பேர் பலி.!

ஷாஜஹான் ஷேக்கிற்கு எதிராக மாநிலத்தில் பல இடங்களில் ஏராளமான பெண்கள் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.   தலைமறைவாக இருந்த ஷாஜகான் ஷேக்கை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனப் பலரும் சாடினர். இந்நிலையில், ஷேக் ஷாஜஹான் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் சிறப்பு வங்காள போலீஸ் குழுவால் கைது செய்யப்பட்டார்.

READ MORE-பரபரக்கும் இமாச்சல் பிரதேச அரசியல்.! 15 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடி சஸ்பெண்ட்.!

அவர் 55 நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து, அவரை  பாசிர்ஹாட் நீதிமன்றத்தில்போலீசார் ஆஜர்படுத்தப்படுத்த உள்ளனர். ரேஷன் ஊழல் வழக்குத் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி ஷாஜகானுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்த வந்தபோது அவருடைய ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்குதல் நடத்தினர்.

பின்னர் ஷாஜகான் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் 55 நாட்களுக்கு பின்னர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.