லடாக்கில் என்ன செய்கிறது சீனா ? வெளியான செயற்கைகோள் படங்கள்

கடந்த திங்கள் கிழமை இரவு லடாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் இந்தியாவில் 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், கால்வான்

கடந்த திங்கள் கிழமை இரவு லடாக்கில் நடைபெற்ற சீன ராணுவத்தினருடனான மோதலில் இந்தியாவில் 20 இராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற தாக்குதலின் ஒரு நாளுக்குப் பிறகு, அதாவது செவ்வாய் கிழமை செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.

ஆனால், ஒரு வாரத்திற்கு முன்அதாவது (ஜூன் 9-ம் தேதி)செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் எந்தவித செயல்பாடுகளும் அதிகமாக இல்லை. கடந்த (ஜூன் 16-ம் தேதி) செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் செயல்பாடுகள் அதிகமாக இருப்பது அந்த புகைப்படத்தில் தெரிகிறது.

unknown node