பஞ்சாபில் ஜனவரி 7 முதல் பள்ளிகள் திறப்பு ; போதும் திறந்திடுங்க பெற்றோர்கள் கோரிக்கை

Schools open in Punjab from January 7; Parents request to be open enough

பஞ்சாபில் ஜனவரி 7 முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் 5 முதல் 12 வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும் என்று பஞ்சாப் கல்வி அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா தெரிவித்துள்ளார். பள்ளிகளின் நேரம் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இருக்கும் என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோரின் தொடர்ச்சியான கோரிக்கையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா  தொற்றுநோய்க்கு மத்தியில் பள்ளிகள் திறக்கப்படுவதால் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.