அதானி விவகாரம் தொடர்பாக விசாரிக்க சிறப்பு நிபுணர்கள் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு.
ஹிண்டன்பர்க் அறிக்கை:
unknown nodeஅமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், கடந்த மாதம் 25ம் தேதி அதானி குழுமம் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள், தங்களது நிதிநிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாகக் காட்டி பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபடுவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.
எதிரிக்கட்சிகள் எதிர்ப்பு:
unknown nodeஇதனைத்தொடர்ந்து, அதானி குழுமத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் பங்குகளின் விலை பங்குசந்தையில் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. அதானி குழும முறைக்கேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என எதிரிக்கட்சிகள் குரல் எழுப்பிய நிலையில், நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதுதொடர்பாக வழக்கும் தொடுக்கப்பட்டது.
சிறப்பு குழு அமைப்பு:
unknown nodeஇந்த நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, அதானி – ஹிண்டன்பர்க் விவகாரத்தில் செபி அமைப்பை விரிவான விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழுவையும் அமைத்து ஆணையிடப்பட்டுள்ளது.
செபி அறிக்கை அளிக்க உத்தரவு:
unknown nodeஅதன்படி, அதானி – ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம் குறித்த வழக்கில், ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் குழு 6 பேர் கொண்ட குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 2 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து செபி அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முதலீட்டாளர்களின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் நெறிமுறை குழு தேவை என்பதை உணர்கிறோம் என நீதிபதிகள் கூறியுள்ளார்.