முக்கியமான ரகசிய தகவல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய நிதி அமைச்சக ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர்.
டெல்லி மத்திய நிதி அமைச்சகத்தின் முக்கிய தகவல்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய குற்றத்திற்காக நிதி அமைச்சகத்தின் ஒப்பந்த ஊழியரை டெல்லி குற்ற பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஊழியர் நிதி அமைச்சகத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராக பணிபுரியும் சுமித் என காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுமித் பணம் வாங்கிக்கொண்டு நிதி அமைச்சகம் தொடர்பான ரகசிய தகவல்களை வெளிநாடுகளைச் சேர்ந்த அவரது கூட்டாளிகளிடம் பகிர்ந்துள்ளார். தகவல்களை பகிர்ந்து கொள்ள அவர் பயன்படுத்திய மொபைல் போன் சுமித்திடம் இருந்து கைப்பற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சுமித் மீது குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது