ரகசியமாக இரண்டாவது திருமணம் – அரசியலுக்கு தடையாக இருந்ததால் குழந்தை அடித்து கொலை!

ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், அரசியலுக்கு தடையாக இருந்த குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துகொண்டதால், அரசியலுக்கு தடையாக இருந்த குழந்தை அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா என்னும் இடத்தை சேர்ந்த 35 வயதான நிங்கப்பா என்பவருக்கு திருமணமாகி மூன்று மகன்கள் மற்றும் மனைவியுடன் வாழ்ந்து வந்த நிலையில், இடையிலே சசிகலா எனும் பெண்ணுடன் இவர் அறிமுகம் ஆகியுள்ளார். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி, இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இவர்களுக்கு சிரிஷா எனும் இரண்டு வயது பெண் குழந்தையும் பிறந்துள்ளது. பஞ்சாயத்து தலைவராக நிற்பதற்கு தேர்தல் வருவதால் அதற்கு தயார் ஆகி வந்து கொண்டிருந்த நிலையில், நிங்கப்பாவிடம் இரண்டாவது மனைவி சசிகலா ஊரறிய தன்னை மனைவி என்று அறிமுகப்படுத்தி அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் ஏற்கனவே அவரது மனைவி ஒருவர் இருக்கும்பொழுது இவரை எப்படி மனைவி என்று அறிமுகப் படுத்த முடியும் என்பதால் நீங்கப்பா குழந்தையை சசிகலா ஊருக்கு செல்லும் போது தன்னிடம் விட்டு செல்லும்படி கூறி உள்ளார். இதனால் சசிகலாவும் சிரிஷாவை விட்டு சென்றுள்ளார். பின் சசிகலா திரும்பி வந்து பார்க்கும் பொழுது குழந்தை காணவில்லை என நிங்கப்பா கூறி நாடகம் ஆடியுள்ளார். அதன்பின் சசிகலாவுடன் சேர்ந்து  குழந்தையை தேட ஆரம்பித்துள்ளார். போலீசில் புகார் அளித்து ஒரு மாதம் கழித்து தற்போது தான் அரசியல் வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் எனக் நினைத்து குழந்தையை அடித்து குழிதோண்டி புதைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சசிகலா அரசியல் வாழ்க்கைக்கு தடையாக இருப்பார் என்ற எண்ணத்தில் குழந்தையை கொன்றதாகவும்,  குழந்தையை வைத்து மிரட்டலாம் என்பதற்காக இவ்வாறு ஒரு காரியத்தை செய்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

ரகசியமாக இரண்டாவது திருமணம் – அரசியலுக்கு தடையாக இருந்ததால் குழந்தை அடித்து கொலை!