காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொலை!

Three militants have been shot dead in a firing by security forces in Sobhan district of Kashmir last night.

காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நேற்று இரவு நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் உள்ள சோபியன் மாவட்டம் கணிகாம் எனும் பகுதியில் நேற்று இரவு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தி உள்ளனர். அப்போது அங்கு 4 பயங்கரவாதிகள் பதுங்கி இருந்ததை கண்டு பிடித்து உள்ளனர். பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மற்றும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கும் துப்பாக்கி சண்டை வெடித்துள்ளது.

இருப்பினும், அவர்களிடம் பேச்சுவார்த்தை மூலம் பேசி சரணடைய வைக்கும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் அங்கிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பயங்கரவாதி சரணடைந்துள்ளார்.  உயிரிழந்த பயங்கரவாதிகள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.