இந்தியா கூட்டணியை பிரதமர் மோடியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.! காங்கிரஸ் மூத்த தலைவர் விமர்சனம்.!

வரும் 2023 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ், திமுக , ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 பிரதான கட்சிகள் இந்தியா எனும் கூட்டணியில் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். அதே போல, பாஜகவும் தங்கள் ஆதரவு கட்சிகளோடு இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி என செயல்பட்டு வருகிறது.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பற்றி காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளரும், ராஜ்ய சபா எம்பியுமான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்து உள்ளார். அவர் கூறுகையில், காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவானதை பிரதமர் மோடியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அதன் காரணமாக தான் தேசிய ஜனநாயக கூட்டணியை மீண்டும் அரசியல் களத்தில் கொண்டு வந்துள்ளார் பிரதமர் மோடி. ஆக்கப்பூர்வமாக நடவடிக்கைகளில் ஈடுபடாமல், வெறுமனே பேசி வருகிறார் பிரதமர் மோடி. பிரிவினையைத் தூண்டும் அரசியலை மக்கள் தற்போது வெறுத்து வருகின்றனர்.
தற்போது தேவையானது, நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பது மட்டுமல்ல. அதனை வலுப்படுத்த வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார் .