டெல்லி மக்களின் முதுகில் மத்திய அரசு குத்திவிட்டது.! முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனம்.!  

Delhi CM Arvind Kejiriwal

டெல்லியில் அரசு அதிகாரிகளை மாற்றவும், நியமிக்கும் உரிமையில் மாநில அரசின் அதிகாரத்தை குறைக்கும் வண்ணம் புதிய மசோதாவானது நேற்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றியது.

டெல்லி மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த பிறகு , 4 மணிநேரமாக மசோதா மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ், திமுக , ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். ஆம் ஆத்மி எம்பி ரின்கு இந்த மசோதா குறித்த காகிதங்களை கிழித்து எறிந்ததால் அவரை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்ட்டு இருந்தார்.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு, பாஜக உள்ளிட்ட சில கட்சிகளிடம் ஆதரவு என குரல் வாக்கெடுப்பு மூலம் டெல்லி சட்ட மசோதா நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. டெல்லி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசம் என்பதால் அதன் மீது சட்டம் இயற்றும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், டெல்லி சட்ட மசோதாவுக்கு டெல்லி மாநில முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளார் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், 2013ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி பாஜக செய்த ட்வீட்டை சுட்டிக்காட்டி,  தேசியத் தலைநகர் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து அளிப்பதாக அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றாததால், மத்திய அரசு, டெல்லி மக்களை முதுகில் குத்திவிட்டதாக பதிவிட்டார்.

டில்லிக்கு முழு மாநில அந்தஸ்து தருவதாக பாஜக வாக்குறுதி அளித்தது. 2014ல், பிரதமர் ஆனவுடன், டில்லிக்கு முழு மாநில அந்தஸ்து தருவதாக, 2014ல், மோடியே பிரச்சாரம் செய்தார்.  ஆனால், இன்று, இவர்கள், டில்லி மக்களின் முதுகில் குத்தியுள்ளனர். இனிமேலாவது மோடி சொல்லுவதை நம்ப வேண்டாம். என அதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்