கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த மூத்த பத்திரிக்கையாளர் உயிரிழப்பு...!

Rohit Sardhana, who had been working for Zee Media for a long time, died at the hospital this morning due to a corona infection.

ஜீ மீடியாவில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த, ரோஹித் சர்தானா கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை மாரடைப்பு காரணமாக காலமானார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ்சால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் சமீப நாட்களாக பிரபலங்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகிற நிலையில், சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில், ஜீ மீடியாவில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வந்த, ரோஹித் சர்தானா ஏப்ரல் 24 ஆம் தேதி, கொரோனா தொற்றால் பாதிக்கட்டிருந்ததாக ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர், ஜீ நியூஸில் இந்தியாவில் சமகால பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் பிரபலமான விவாத நிகழ்ச்சியான ‘தால் தோக் கே’ நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.