பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 396 புள்ளிகள் குறைந்து 62,887 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,700 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்துவந்த பங்குச்சந்தைகள் இன்று சரிந்துள்ளன. இன்று மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 396 புள்ளிகள் அல்லது 0.63% என சரிந்து 62,887 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ(NSE) நிஃப்டி 111 புள்ளிகள் அல்லது 0.59% சரிந்து 18,700 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.
முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 63,284 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 18,812 ஆகவும் நிறைவடைந்தது.