உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் நிலவும் கடும் குளிரால் ஒரே நாளில் 25 பேர் பலி உயிரிழந்துள்ளனர்..
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் நிலவும் கடும் குளிரால் ஜனவரி 5ம் தேதி நேற்று மாரடைப்பு மற்றும் மூளைப் பக்கவாதம் காரணமாக 25 பேர் உயிரிழந்தனர். குளிரில் திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்து ரத்தம் உறைந்து மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்பு ஏற்படுவதால் மரணம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இறந்த 25 பேரில், 17 பேர் மருத்துவ உதவி வழங்குவதற்கு முன்பே உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், நேற்று 723 இதய நோயாளிகள் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 இதய நோயாளிகள் குளிர் காரணமாக உயிரிழந்தனர்.
மேலும் பதினைந்து நோயாளிகள் இறந்த நிலையில் அவசர சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்டனர். உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் மக்கள் கடும் குளிரை எதிர்கொண்டு வருகின்றனர். நொய்டா, காஜியாபாத், அயோத்தி, கான்பூர், லக்னோ, பரேலி மற்றும் மொராதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடும் குளில் நிலவுகிறது. மேலும், வட இந்தியாவின் பல பகுதிகள் கடுமையான குளிர் மற்றும் அடர்ந்த மூடுபனியால் தத்தளித்து வருகின்றன.