ஒரு நாள் விடுமுறை எடுத்து பிறந்தநாளை கொண்டாடுங்கள்.! பிரதமர் மோடிக்கு ஷாருக்கான் வாழ்த்து.!

உங்களுக்கு வலிமையும் ஆரோக்கியமும் இருக்க வேண்டும். ஒரு நாள் விடுமுறை எடுத்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள் - பிரதமர் மோடிக்கு ஷாருக்கான் டிவிட்டரில்

உங்களுக்கு வலிமையும் ஆரோக்கியமும் இருக்க வேண்டும். ஒரு நாள் விடுமுறை எடுத்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள் – பிரதமர் மோடிக்கு ஷாருக்கான் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது 72வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவருக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது, பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திரை பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரிவித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது வாழ்த்தை தனக்கே உரித்த பாணியில் நகைச்சுவை கலந்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், ‘ நமது நாட்டு மக்களின் நலனுக்கான உங்கள் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்திற்குரியது. உங்கள் அனைத்து இலக்குகளையும் அடைவதற்கு உங்களுக்கு வலிமையும் ஆரோக்கியமும் இருக்க வேண்டும். ஒரு நாள் விடுமுறை எடுத்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள் சார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் .’ என பதிவிட்டுள்ளார் ஷாருக்கான்.

unknown node