சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல்..!

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் பெயரைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத்துக்கு, லாரன்ஸ் பிஷ்னோய் பெயரைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத், லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலிடம் இருந்து தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சஞ்சய் ராவத்தின் மொபைல் போனின் வாட்ஸ்அப்பிற்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் டெல்லியில் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ் வாலாவை கொன்றது போல், சஞ்சய் ராவத்தை எங்காவது பார்த்தால் ஏகே-47 துப்பாக்கியால் சுட்டுக் கொல்வோம் என்று எழுதியிருந்துள்ளது.

unknown node

இதுகுறித்து சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் கூறுகையில், “எனக்கு ஒரு மிரட்டல் செய்தி வந்தது. நான் இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்துள்ளேன். இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இதேபோன்று என் மீது தாக்குதல் நடத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.” என்று கூறினார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் புனேவைச் சேர்ந்த நபர் ஒருவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

unknown node

சஞ்சய் ராவத்துக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக புனேவைச் சேர்ந்த நபர் லாரன்ஸ் பிஷ்னோயின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார். முன்னதாக பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும் அவர் விசாரிக்கப்படுவார் என்றும் பிஷ்னோய் கும்பலுடன் குற்றம் சாட்டப்பட்டவரின் தொடர்பு குறித்தும் விசாரணை நடத்தப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.