அதிர்ச்சி...கடந்த ஒரே நாளில் கொரோனாவால் 2796 பேர் பலி;8,895 பேர் பாதிப்பு!

Shock ... Corona kills 2796 in last one day; 8,895 affected!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,895 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 2796ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  3,46,33,255 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 8,895 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட  500 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை  3,46,33,255 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 2796 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,73,326 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 6,918 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,60,774 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 99,155 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை1,27,61,83,065பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 1,04,18,707பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.