அதிர்ச்சி ! மகாராஷ்டிராவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 297 பேர் பலி

Shock! In Maharashtra, 297 people were killed in a single day in Corona

மகாராஷ்டிராவில் செவ்வாய்க்கிழமை  மட்டும் கொரோனாவுக்கு 297 பேர் பலியாகியுள்ளனர், இது இந்த ஆண்டு மாநிலத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் பதிவான எண்ணிக்கையாகும். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 55,469 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் ஞாயிற்றுக்கிழமை 57,074 கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது , இது தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து மாநிலத்தில் அதிகமாகும்.