கடைகள், வங்கிகளுக்கு செல்வோர் கட்டாயம் தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்க வேண்டும் – கேரள அரசு!

The Kerala government has issued a new notification requiring shopkeepers and banks to carry the Corona Vaccine Certificate or Corona Negative Certificate on hand.

கடைகள் மற்றும் வங்கிகளுக்கு செல்வோர் கூட கைகளில் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என கேரளா அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கேரளாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் திருவோண பண்டிகை காரணமாக கடைகள் அனைத்தும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மார்க்கெட், வங்கி, வியாபார நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு செய்பவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வாரத்திற்கு முன்பதாகவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகளை கையில் வைத்திருக்க வேண்டும் எனவும், இந்த சான்றிதழ் இல்லாதவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனும் நோக்கத்தில் கேரள அரசு இந்த திட்டத்தை வகுத்துள்ளது.