பாட்டு சத்தத்தை குறைக்குமாறு கூறிய கர்ப்பிணி மீது துப்பாக்கி சூடு..!

பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது.

பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன கர்ப்பிணி பெண்ணை துப்பாக்கியால் சுட்ட நபர் கைது.

30 வயது கர்ப்பிணிப் பெண்மணி ஒருவர் தனது வீட்டின்  பக்கத்தில், அதிக சத்தத்தில் பாட்டு கேட்டதால், சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது பக்கத்து வீட்டுக்காரர்அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

கர்ப்பிணி பெண் மீது துப்பாக்கிசூடு

ஞாயிற்றுக்கிழமை, ஹரிஷின் மகனின் ‘குவன் பூஜை’ என்ற பெயரில் ஒரு விழா நடந்தது. அதில் ஒரு டிஜே பாடல் சத்தமாக இசைக்கப்பட்டுள்ளது.  இதைக் கேட்ட கர்ப்பிணி பெண், ரஞ்சுவும் அவளுடைய அண்ணியும் பால்கனிக்கு வந்து பட்டு சத்தத்தை நிறுத்துமாறு ஹரிஷிடம் சொன்னார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சுவை அமித்திடம் இருந்து உரிமம் இல்லாத தேசி கட்டா என்ற துப்பாக்கியை எடுத்து ஹரிஷ் கர்ப்பிணி பெண்ணை சுட்டுள்ளார். கழுத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சையின் போது கருவை இழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஐபிசி பிரிவு 307 (கொலை முயற்சி) மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஹரிஷ் மற்றும் அமித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். ஹரிஷ் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், அமித் அப்பகுதியில் மொபைல் பழுதுபார்க்கும் கடை வைத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.