இந்தியா-ஐக்கியஅரபுஅமீரகம் இடையே பசுமை ஹைட்ரஜன் திட்ட ஒப்பந்தம் கையெழுத்து.!

இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் பசுமை ஹைட்ரஜன் மேம்பாடு மற்றும் கடலுக்கடியில் கேபிள் இணைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து.

இந்தியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் பசுமை ஹைட்ரஜன் மேம்பாடு மற்றும் கடலுக்கடியில் கேபிள் இணைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து.

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே பசுமை ஹைட்ரஜன் மேம்பாடு மற்றும் கடலுக்கடியில் கேபிள் இணைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் சுஹைல் அல் மஸ்ரூயி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மூன்றுநாள் பயணமாக அபுதாபி சென்றுள்ள ஆர்.கே.சிங், அந்நாட்டு அமைச்சர் சுஹைல் அல் மஸ்ரூயியுடன் நடந்த சந்திப்பில், எரிசக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் குறித்து இருநாடுகளுக்கிடையே இருக்கும், பல்வேறு வாய்ப்புகளை பற்றி இருவரும், பேசியுள்ளனர்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்த தகவலின்படி, பிரதமர் மோடி அறிவித்த “ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்ட முயற்சி” திட்டத்தின் கீழ் இருநாடுகளுக்கிடையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என்று கூறியது.