101 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரிவுரையாளர்களாக விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் என அறிவிப்பு.
புதுச்சேரியில் 100 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பு நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 45 நடுநிலை பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு மற்றும் 192 பயிற்சியாளர்கள் ஒப்பந்தம் அடிப்படையில் நியமனம் செய்யப்படும். 152 பயிற்சி பெற்ற பட்டதாரிகள், 145 தூடகப்பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்றும் 101 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரிவுரையாளர்களாக விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.
மேலும், புதுச்சேரியில் 130 பேர் மட்டுமே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவில்லை என அமைச்சர் நமச்சிவாயம் விளக்கமளித்துள்ளார். 130 பேர் பொதுத்தேர்வு எழுதவில்லை என ஆய்வு செய்தபோது ஐடிஐ பாடப்பிரிவில் படிப்பது தெரிய வந்துள்ளது. புதுச்சேரியில் காமராஜர் மணி மண்டபத்தில் ஏப்ரல் மாதம் முதல் சென்டாக் தேர்வு அலுவலகம் இயங்கும் என்றும் போட்டி தேர்வுக்கான நூலகம் அமைக்கப்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.