இதுவரை 116.50 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி;3.39 கோடி பேர் குணமடைவு!

So far 116.50 crore people have been vaccinated against corona; 3.39 crore have been cured!

இந்தியா:கடந்த 24 மணி நேரத்தில் 10,488 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை313ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,10,413 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10,488 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 180 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,45,10,413 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 313 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,65,662 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,329 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  3,39,22,037  ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.30% ஆக அதிகரிப்பு.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,22,714 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.532 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,16,50,55,210 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 67,25,970பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.