காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை!

Interim Congress leader Sonia Gandhi will hold consultations with dissident leaders today. Rahul and Priyanka Gandhi will participate in it.

காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களுடன் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தததையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதனையடுத்து அக்கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். பின்னர் பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா அக்கட்சியை விட்டு விலகினார். இதனால் கட்சியை பலப்படுத்த முழுநேர தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினார்கள். மேலும், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் விலகியதால் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது போன்றவற்றால் கட்சித் தலைமைக்கு எதிராக மூத்த தலைவர்கள் பலரும் குரல் எழுப்பினார்கள்.

இந்நிலையில், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களுடன் அக்கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் ஆலோசனையை தொடங்கியுள்ளார். இந்தக் கூட்டத்தில் குலாம் நபி ஆசாத் உட்பட மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.