நடிகை ரியாவிற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து , வழக்கினை தள்ளுபடி செய்தது மும்பை சிறப்பு நீதிமன்றம்.
கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இதனால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் நடிகை ரியா, அவரது சகோதரருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இந்த கொலை வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் ரியா சக்ரபொர்த்தி கைது செய்யப்பட்டார். அவரது சகோதரர் ஷோயிக், சுஷாந்தின் உதவி தீபேஷ் சாவந்த் மற்றும் வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா உள்ளிட்டோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ரியா சக்ரபொர்த்தியிடம் வீடியோ கான்பிரன்சிங் மூலம் மாஜிஸ்டிரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவரை செப்டம்பர் 22-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க விசாரணை போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.இதனிடையே போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகை ரியா சக்ரபோர்த்தி,சகோதரர் ஷோயிக் உள்ளிட்டோர் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். ரியா தாக்கல் செய்த மனுவில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தன்னிடம் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து இன்று ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது.அதில் ரியா உள்ளிட்டோருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து , வழக்கினை தள்ளுபடி செய்தது மும்பை சிறப்பு நீதிமன்றம்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…