மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி

Geetha Shivrajkumar: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நிலையில் கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார்

Featured image

Geetha Shivrajkumar: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள நிலையில் கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் ஷிமோகா போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் இன்று  அறிவித்தார்.

இன்று வெளியிடப்பட்டுள்ள 39 வேட்பாளர்களில் 12 வேட்பாளர்கள் 50 வயதுக்கும் குறைவானர்கள் ஆவர், 7 வேட்பாளர்கள் 71ல் இருந்து 76 வயதில் உள்ளவர்கள். மற்ற 20 வேட்பாளர்கள் 50-ல் இருந்து 70 வயதுடையவர்கள் ஆவார்கள்.

Read More –மக்களவை தேர்தல்..! காங்கிரஸ் முதல் வேட்பாளர் பட்டியல்.. ராகுல்காந்தி மீண்டும் வயநாட்டில் போட்டி

காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்களில் முக்கிய நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியல்: ராகுல்காந்தி (வயநாடு), சசி தரூர் (திருவனந்தபுரம்), கீதா சிவராஜ்குமார் (ஷிமோகா), கே.சி வேணுகோபால் (ஆலப்புழா), பூபேஷ் பாகல் (ராஜ்நந்த்கான், சத்தீஸ்கர்), டி.கே சுரேஷ் (பெங்களூரு ரூரல் ) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். மற்ற தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node