பங்குச்சந்தை முடிவு..! சென்செக்ஸ் 448 புள்ளிகள் உயர்வு..!

இன்றைய வர்த்தக நாளில் 59,136 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 448 புள்ளிகள் அல்லது 0.76% என

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 448 புள்ளிகள் அதிகரித்து 59,411 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,450 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 59,136 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில் 448 புள்ளிகள் அல்லது 0.76% என அதிகரித்து 59,411 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 146 புள்ளிகள் அல்லது 0.85% அதிகரித்து 17,450 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இண்டஸ்இண்ட் வங்கி, மாருதி சுஸுகி இந்தியா, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே சென்செக்ஸில் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

அதானி எண்டர்பிரைசஸ், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், யுபிஎல் லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, சிப்லா லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், எச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.