பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 204 புள்ளிகள் அதிகரித்தது..!

இன்றைய வர்த்தக நாளில் 57,572 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 204 புள்ளிகள் அல்லது 0.35% என அதிகரித்து 57,817 ஆகவும், தேசிய

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 204 புள்ளிகள் அதிகரித்து 57,817 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,010 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 57,572 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 204 புள்ளிகள் அல்லது 0.35% என அதிகரித்து 57,817 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 58.75 புள்ளிகள் அல்லது 0.35% அதிகரித்து 17,010 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 57,613 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 16,951 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ், லார்சன் & டூப்ரோ ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இண்ட் வங்கி, டாடா ஸ்டீல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, இன்ஃபோசிஸ் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட், ஐஷர் மோட்டார்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

யுபிஎல் லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், சிப்லா லிமிடெட், இன்ஃபோசிஸ் லிமிடெட், அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் எண்டர்பிரைஸ் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.