பங்குச்சந்தை உயர்வு..! சென்செக்ஸ் 332 புள்ளிகள் அதிகரித்தது..!

இன்றைய வர்த்தக நாளில் 59,136 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 332 புள்ளிகள் அல்லது 0.56% என அதிகரித்து 59,294 ஆகவும், தேசிய

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 332 புள்ளிகள் அதிகரித்து 59,294 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 17,406 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இன்றைய வர்த்தக நாளில் 59,136 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 332 புள்ளிகள் அல்லது 0.56% என அதிகரித்து 59,294 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 102.80 புள்ளிகள் அல்லது 0.59% அதிகரித்து 17,406 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 58,962 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,303 ஆகவும் நிறைவடைந்தது.

சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

ஆக்சிஸ் வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், இன்ஃபோசிஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் :

அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன், ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், மஹிந்திரா & மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சர்வ், யுபிஎல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் லாபம் அடைந்துள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், சிப்லா லிமிடெட், எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம், கோல் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்கள் நஷ்டம் அடைந்துள்ளது.