பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்ட மாணவி..!

ஹரியானா பல்லாப்கர் பகுதியில் 21 வயது மாணவி ஒருவர் தனது கல்லூரிக்கு வெளியே நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை

ஹரியானா பல்லாப்கர் பகுதியில் 21 வயது மாணவி ஒருவர் தனது கல்லூரிக்கு வெளியே நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று பிற்பகல் 3.40 மணியளவில் காரில் வந்த இரண்டு இளைஞர்கள் கல்லூரிக்கு வெளியே நடந்து சென்று கொண்டிந்த பெண்களை வழிமறித்து ஒரு பெண்ணை காரில் ஏற்ற முயற்சி செய்தனர். அப்போது, சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின் இளைஞர் ஒருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த பெண்ணை சுட்டுவிட்டு காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டார்.

காயமடைந்த அந்த பெண்ணை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர்.

unknown node