#Breaking: 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி "ஆல் பாஸ்"- பஞ்சாப் முதல்வர் அதிரடி!

Punjab Chief Minister Amarinder Singh has announced that 5th, 8th and 10th class students in the state will pass all the exams.

பஞ்சாப் மாநிலத்தில் 5, 8, 10-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என்று அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.அதேசமயத்தில், தடுப்பூசி போடும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், பஞ்சாப் மாநிலத்தில் 5, 8, 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என்று முதல்வர் அமரிந்தர் சிங் அறிவித்துள்ளார். மேலும், சூழலை பொறுத்து ஒத்திவைக்கப்பட்ட 12-ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.